
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு கோரிக்கை!
நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 7ஆம் திகதிவரை, அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், காரியாலயங்களிலும், வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
73 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர சதுர்க்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.