
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு..!
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 859 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 313 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் கொத்தட்டுவ பகுதியில் 74 பேருக்கும் கொழும்பு கோட்டை பகுதியில் 60 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 211 பேருக்கு தொற்றுறுதியானது.
களுத்துறை மாவட்டத்தில் 78 பேருக்கு நேற்று தொற்றுறுதியாகியுள்ளது