
7 லட்சம் ரூபா பெறுமதியான போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது..!
இந்தியாவில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் உதவியாளர் சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதை பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினரால் குறித்த தெரியவந்துள்ளது.
3 கிலோகிராம் கஞ்சா போதை பொருள் மற்றும் 21 கிராம ஐஸ் போதை பொருளுடன் முல்லேரியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
7 லட்சம் ரூபா பெறுமதியான போதை பொருளுடன் நேற்றிரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அங்கொட லொக்காவின் உதவியாளரான தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள க்ளெமன் குணரத்ன என்பவரால் குறித்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுவடுதாக இதன்போது தெரியவந்துள்ளது.