“எனது மனைவி ஆபத்தான நிலையில் இல்லை” பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் தகவல்

“எனது மனைவி ஆபத்தான நிலையில் இல்லை” பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் தகவல்

நேற்று காலை தேசிய தொற்று நோய் மருத்துவமனையின் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சுவாசக் கோளாறுகள் காரணமாக அவருக்கு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டாலும் அவர் குணமடைந்து வருகிறார் என்று அமைச்சரின் கணவர் காஞ்சன ஜெயரத்ன தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில்,

இந்த வார தொடக்கத்தில் சில சுவாசக் கஷ்டங்கள் ஏற்பட்டன. அதிக காய்ச்சல் மற்றும் சளி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐ.டி.எச் இன் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

"அவர் ஆபத்தான நிலையில் இல்லை. அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சளி உள்ளது. ஆனால் மருத்துவர்கள் கூற்றுப்படி அவர் நலமடைந்து வருகிறார். நன்றாக குணமடைகிறார்" என்று ஜெயரத்ன கூறினார்.