விரைவில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் - கமால் குணரத்ன எச்சரிக்கை

விரைவில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் - கமால் குணரத்ன எச்சரிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மீண்டும் வர்த்தகத்தில் நுழைவதைத் தடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஆழ்கடல்களில் இறங்கி 1400 கிலோகிராம் போதைப்பொருட்களை கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போது ஒரு பகுதி நீதிமன்றத்திற்குச் செல்கிறது,

மற்ற பகுதி வர்த்தகத்திற்கு செல்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான கறைபடிந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு வழக்குத் தொடரப்படும் என அவர் எச்சரித்தார்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் போது நீதிபதிக்கு ஒரு மாதிரியை முன்னிலைப்படுத்தவும், மீதமுள்ள போதைப்பொருளை உடனடியாக அழிக்கவும் நீதி அமைச்சருடன் கலந்தாலோசித்து ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்படும் என்றார்.