
சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு நாளை முதல் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை..!
நாளைய தினம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள சுகாதார துறையினருக்கும் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்காக பொதுமக்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விளக்கமளித்துள்ள வைத்தியர் குமார விக்ரமசிங்க, இன்றைய தினம் தேசிய வைத்தியசாலையில் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மூன்று நாட்களுக்குள் அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
10,000 அளவிலான பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அசௌகரியமானது என்பதனால், தேசிய வைத்தியசாலையில் 4 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய தினம் தடுப்பூசி மூலம் முதலாவது தடையாக மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு, இரண்டாவது தடவையாக மருந்து செலுத்துவது இன்னும் ஒரு மாதத்தில் இடம்பெறும் என்றும் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்