வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட பேருந்து! பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட பேருந்து! பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

மட்டக்களப்பு பிராதன வீதி புனானையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து, இன்று காலை பயணிகளுடன் பயணித்துள்ளது. இதன்போது புனானைப் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லமுற்பட்டபோது, வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி, தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மூவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.