
நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு..!
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 892 பேரில், 60 சதவீதமானோர் மேல்மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில், கொழும்பு மாவட்டத்திலேயே நேற்றைய தினம் அதிகமானோருக்கு தொற்றுறுதியானது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 298 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 191 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளில் தலா 24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 203 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பகுதியில் நேற்றைய தினம் 29 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 20 மாவட்டங்களில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதற்கமைய கண்டி மாவட்டத்தில் 56 பேருக்கும், களுத்துறை 42 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 42 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் இதுவரையில் 61 ஆயிரத்து 586 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 54 ஆயிரத்து 435 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கிணங்க தொற்றுறுதியான 6 ஆயிரத்து 854 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.