
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு! கருவாட்டு வியாபாரத்தை மேம்படுத்தப்பட கோரிக்கை
கிண்ணியாவில் தோனா கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும் கருவாடு உற்பத்தியும் வியாபாரமும் சிறந்த முறையில் பிரதேச வருமானத்தை பெற்று தரும் வியாபாரங்களில் ஒன்றாகவும் மற்றும் நிறைய குடும்பங்களின் வாழ்வாதாரம் நிவர்த்தி செய்வதாலும் மேலும் அதை ஊக்குவிக்கும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது.
இந்த வியாபாரம் மேலும் மேம்படுத்தி நவீன முறைகளை தொழிலாளர்களுக்கு அறிமுகம் செய்து சிறந்த முறையில் அவர்களின் கடை கட்டங்களை நவீன முறையில் அமைத்து சிறந்த தரத்தை ஏற்படுத்துவதே காலத்தின் அவசர தேவையாக உள்ளது.
இந்த வியாபாரம் மிகவும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவர்ந்து வருவதால் இதை ஒரு சிறந்த முறையில் நிலைப்படுத்தி தொழிலாளர்களை ஊக்கிவிப்பது கட்டாயம்.
இது சம்பந்தமாக கடலோர பாதுகாப்பு திணைக்களமும் costal conservation dept (CCD) சம்பந்தப்பட்டு இந்த வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இது சம்பந்தமாக நாம் பூர்வாங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறோம் என அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.