
துறைமுக தொழிற்சங்கத்தினால் இன்று சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..!
துறைமுக தொழிற்சங்கம் இன்று மதியம் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உடன்படிக்கையில் நூறு வீதம் உரிமம் துறைமுக அதிகார சபைக்கு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் 23 துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கிழக்கு முனையத்தின் உரிமையை 100 சதவீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் இல்லாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முன்னைய அரசாங்கமாக இருந்தால், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறொரு நாட்டுக்கு வழங்கியிருக்கும் என ராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்