பறவைகளை இறக்குமதி செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரொருவர் கைது..!

பறவைகளை இறக்குமதி செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரொருவர் கைது..!

குவைத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள விலை கூடிய 62 பறவைகளில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பாது இரகசியமாக விற்பனை செய்யப்பட்ட 14 பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நாத்தாண்டி – துனகதெனிய பகுதியில் நேற்றைய தினம் குறித்த பறவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பறவைகளை இறக்குமதி செய்யும் போது 1992 ஆம் ஆண்டு 59 இலக்க மிருக நோய் கட்டளை சட்டத்திற்கு அமைய அவற்றை கட்டுநாயக்க – நைகந்தேவில் அமைந்துள்ள மிருக தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதன்படி குறித்த பறவைகள் சுமார் ஒரு மாதம் அங்கு அனுப்பப்பட வேண்டும்.

எனினும் 62 பறவைகளில் 42 பறவைகள் மாத்திரமே தனிமைப்படுத்தலுக்காக அனுப்பட்டுள்ளன.

அத்துடன் கால்நடை மருத்துவரின் கண்காணிப்பு இன்றி இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எஞ்சிய 20 பறவைகளும் ஒரு ஜோடி 3 லட்சத்து 50 ஆயிரம் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 14 பறவைகளே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

ஏனைய 6 பறவைகளும் ஏற்கனவே வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பறவைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த கண்டி – நுகவெல பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்