இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்..!

இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்..!

இந்திய அரசாங்கத்தால் தருவிக்கப்பட்ட கொவிட் 19 தடுக்கும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகள் ஆறில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி கொவிட் 19 தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் வழங்கிய முதல் தொகுதியான 5 லட்சம் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் நேற்றைய தினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது