கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்! ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்! ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து, நாளைய தினம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ அல்லது குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாது என ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை வர்த்தக திட்டமாக அவர் முன்மொழிந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.