கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் இராஜாங்க அமைச்சர்

கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் இராஜாங்க அமைச்சர்

கொரோனா தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த முற்றாக குணமடைந்துள்ளார்.

கொக்கல தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் இன்று (28) காலை வீடு திரும்பியதாக அவரது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதில்பியால் நிஷாந்தா உட்பட மூன்று உறுப்பினர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அருந்திகா பெர்னாண்டோ, வசந்த யாபா பாண்டர மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.