ஹப்புத்தளையில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி..!

ஹப்புத்தளையில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி..!

பதுளை - ஹப்புத்தளை- பெரகல கீழ் ப்ளக்வுட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று, சுமார் 180 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.