கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் ஒருவர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க துணை செயலாளர்மருத்துவர் நவின் டி சொய்ஸா, பாதிக்கப்பட்ட மருத்துவர் தற்போது காலி கராபிட்டி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது சிகிச்சையை தீவிரப்படுத்த கராபிட்டி போதனா வைத்தியசாலையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதுபோன்ற நிகழ்வுகளின் போது தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சைகள் சில நேரங்களில் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு, சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.