
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கை
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல் மாகாணத்திலிருந்து மக்கள் வெளியேறும் 12 இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொரோனா தொற்றை குறைக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் வருமாறு,
கொச்சிக்கடை, மீரிகம, நிட்டம்புவ,தொம்பே, ஹனேவெல்ல, இங்கிரிய, பதுரலிய,மீகாகத்தென்ன, தினியாவல,கொட்டதெனியாவ, மற்றும் அளுத்கம