
வடக்கு மாகாணத்திற்கு எவ்வளவு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை?
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10, 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த தகவலை தெரிவித்தார்.
முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு வடமாகாணத்தில் கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விபரங்களை சுகாதார அமைச்சு கேட்டிருந்தது.
அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9, 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.
அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என 1000 பேருக்கும் சேர்த்து 10, 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.