
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கு கொவிட்-19 தொற்றுறுதி..!
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருப்பதாக அவர் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
ஏற்கனவே, அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் பியல் நிஷாந்த ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.