திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

திடீரென ஏற்பட்ட நோய்வாய் காரணமாக அவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.