நுரைச்சோலையில் மஞ்சள் மற்றும் களைக்கொல்லிகளுடன் மூவர் கைது..!

நுரைச்சோலையில் மஞ்சள் மற்றும் களைக்கொல்லிகளுடன் மூவர் கைது..!

நுரைச்சோலை - தலுவ கடற்பகுதியில் கடல்மார்க்கமாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் தடை செய்யப்பட்ட களைக்கொல்லி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


கடற்படையினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 70 லட்சம் ரூபா பெறுமதியான ஆயிரத்து 340 கிலோகிராம் மஞ்சள் மற்றும் தடைசெய்யப்பட்ட களைகொல்லியான க்லைஃபோசேட் 800 பொதிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட க்லைஃபோசேட் 5 லட்சம் ரூபா பெறுமதியுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.