இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 6.5 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் இருப்பதாக, தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் 2.1 மில்லியன் பேர் 25முதல் 34 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களாவர்.
அதேநேரம் இலங்கையில் 10.5 சதவீதமான இணையப் பயனாளிகளே இருக்கின்றனர்.
மேலும் இணைய இணைப்பு வளர்ச்சி 10 சதவீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஃபேஸ்புக் நிறுவனம் இலங்கையில் குருதிக்கொடை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அளவில் இந்த வசதி அமுலாக்கப்பட்ட 29வது நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட வசதியின் ஊடாக இலங்கையில் 24 குருதி வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 18 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள், தங்களைப் பதிவு செய்துக்கொண்டு குருதி வழங்கலை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.