நாட்டில் கொரோனா மரணங்கள் 288 ஆக பதிவு..!

நாட்டில் கொரோனா மரணங்கள் 288 ஆக பதிவு..!

நாட்டில் மேலும் கொரோனா மரணமொன்று இன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் றாகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் ஆவார்.

குறித்த பெண் வெலிசரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, ​​அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தேசிய தொற்று நோய்கள் பிரிவுக்கு மாற்றபட்டுள்ளார்.

அதன் போதே அவர் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா மரணங்கள் 288 ஆக உயர்வடைந்துள்ளது.