மட்டக்களப்பில் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள பகுதிகள்!

மட்டக்களப்பில் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள பகுதிகள்!

தனிமைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவில் 5 வீதிகள் நேற்று மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவித்தார்.

குறித்த கிராம சேவகர் பிரிவில் இரு வீதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி அரசடி கிராம சேவகர் பிரிவில் மூர்வீதியில் 79வயது முதியவரும் அதனையடுத்து சில தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததையடுத்து அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது.

அரசடி கிராம சேவகர் பிரிவு முழுவதும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது ஆறு வீதிகளிலும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படாமையினால் இவ்வீதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மூர்வீதி மற்றும் பிள்ளையர் கோயில் வீதி என்பன தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

பழைய வாடி வீட்டு வீதி, பன்சல வீதி, கொலட் லேன், சுப்பையா வீதி, லேடி மெனிங் ட்றைவ், பயனியர் வீதி, ஆகிய ஆறு வீதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.