எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா? கோட்டாபய எடுத்த முடிவு

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா? கோட்டாபய எடுத்த முடிவு

எரிபொருள் விலையை மாற்றியமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நேற்று இரவு (25) ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது, ​​மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் விலை திருத்தம் செய்ய முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.முடிந்தால் எரிபொருள் மீதான வரிகளை குறைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் திறைசேரியுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 57 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 16 ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்று அவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.