
நகைக்கடையில் தமது சிறிய மகளை பயன்படுத்தி கைவரிசையை காட்டிய தம்பதி
தமது சிறிய மகளை பயன்படுத்தி நகைக்கடையில் நகைகளை திருடிய தம்பதியரை கைது செய்வது தொடர்பில் அநுராதபுர பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அநுராதபுரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது நகைக்கடையில் திருட்டு போனமை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து நகைக்கடையில் பொருத்தப்பட்ட சி சி ரி வி காட்சிகளை பார்வையிட்டபோது பெற்றோர் நகைகளை வாங்குவது போல பாவனை காட்ட அவர்களது சிறிய மகளான மாணவி மோதிரம் ஒன்றை திருடுவது தெளிவாக தெரிகிறது.
நேற்று முன்னதினம் வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நகைக்கடை உரிமையாளர் கடையில் நகைகளை சரிபார்த்தவேளை மோதிரம் ஒன்று காணாமற் போனமை கண்டறியப்பட்டது.இதனையடுத்து சி சி ரி வி காட்சிகளை பார்வையிட்டபோது இந்த திருட்டு தெரியவந்தது.
கொள்ளையர்களின் குடும்ப உறுப்பினர்களை பொலிஸார் அடையாளம் காணாதபோதிலும் அவர்களை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.