சுகாதார விதிமுறைகளை மீறிய 88 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

சுகாதார விதிமுறைகளை மீறிய 88 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

மேல் மாகாணத்தில் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 88 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா? என்பது குறித்து ஆராய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய நேற்றைய தினமும் இது தொடர்பான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய தினம் 909 நிறுவனங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட அவற்றில் சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 88 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேணாத 24 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில், 2,770 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.