கொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வருகை பதிவாகியுள்ளது...!

கொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வருகை பதிவாகியுள்ளது...!

கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்காக மேல் மாகாணத்திலுள்ள பல பாடசாலைகள் மாதங்களுக்கு பின்னர் இன்று மீள திறக்கப்பட்டன.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 37 சதவீதமாக மாணவர் வருகை பதிவாகியுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 47 தசம் 4 சதவீத மாணவர் வருகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

களுத்துறை மாவட்டத்தில் 27 தசம் 4 வீத மாணவர் வருகை பதிவாகியுள்ளது.

இந்த தரவுகளுக்கு அமைய அதிகளவான மாணவர் வருகை மத்துகம கல்வி வலயத்தில் இன்று பதிவாகியுள்ளது.

அந்த வலயத்தில் 65 தசம் 5 சதவீத மாணவர் வருகை பதிவானதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.