இழுத்து மூடப்பட்டது தனியார் வங்கி

இழுத்து மூடப்பட்டது தனியார் வங்கி

இரத்மலானையில் உள்ள தனியார் வங்கிகிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வங்கியில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனம் காணப்பட்டதை அடுத்து அதே வங்கியில் பணியாற்றும் 9 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஏழுபேருக்கு கொரோனா தொறறு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.