நீராடச் சென்ற 17 வயது தேருக்கு ஏற்பட்ட நிலை

நீராடச் சென்ற 17 வயது தேருக்கு ஏற்பட்ட நிலை

 

காலி கடலில் நீராடச் சென்ற 17 வயதான தேரர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரர் காலி கோட்டையின் கலங்கரை விளக்கத்திற்கு அருகே இன்று நீராட சென்ற போதே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த தேரருடன் மேலும் 3 தேரர்கள் நீராடச் சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காணாமல் போன தேரரை தேடும் பணியை கடற்படையின் நீச்சல் குழு ஆரம்பித்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணையை காலி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.