கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரிப்பு

இலங்கையில் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரவுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பிக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம், மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.