
உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஒன்றிணைந்து பணியாற்ற இலங்கை - பிலிப்பைன்ஸ் இணக்கப்பாடு
உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஒன்றிணைந்து பணியாற்ற இலங்கைக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளுக்கிடையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான அதிக வாய்ப்புக்களை வழங்கவும் இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
பிலிப்பைன்ஸுக்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டுவிழாவில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தை வாழ்த்துவதற்காக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தியோடோரோ எல். லோக்சினுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்ட தொலைபேசி உரையாடலொன்றின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.