கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரிப்பு..!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரிப்பு..!

நாட்டில் மேலும் மூன்று கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 77 வயதான பெண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து அவர் அங்கிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட்19 நிமோனியா நிலை, உயர் குருதி அழுத்தம், ஈரலில் ஏற்பட்ட தொற்று சிறுநீரக நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதானை பகுதியை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட்19 தொற்றால் குருதி விசமானமை, நியுமோனியா, இதயநோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பூஜாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது .

அதன்பின்னர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விசமானமை என்பன அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.