அரச ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது

அரச ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது

பயம், சந்தேகமின்றி செயல்திறனுடன் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சூழலை இன்று அரச ஊழியர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க இந்த அரசாங்கத்தால் முடிந்துள்ளது என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

செத்சிறிபாய வளாகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வேளையிலேயே இதை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் விமல் வீரவங்ச

“முழு உலகமுமே கொரோனா தொற்றிலிருந்து விடுபடும் சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இவவேளையில் அதற்கு அடிபணியாமல் நாட்டில் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகியவற்றிற்காக பெரும் பணியாற்ற எமது அரசாங்கத்தால் முடிந்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் இந்த பாரிய காரியாலய தொகுதியை அமைக்க ஆரம்ப நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் ‘தொற்றால் எம்மை கட்டுப்படுத்த முடியாது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது’.

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்காடுத்திருந்தனர்.

இன்று எமது அரசாங்கம் அசிங்கமான எடுத்துக்காட்டை பின்பற்றுவதில்லை.

இன்று நாம் அரச ஊழியர்களுக்கு கௌரவமாக பணியாற்ற இடமளித்துள்ளோம். அதனால் அரச ஊழியர்களின் பொறுப்பு என்னவென்றால் உயர் தரத்தில் தமது பணியை பொதுமக்களுக்காக ஆற்றவேண்டும்.

எமது அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அந்த யுகத்தை ஒளிமயமானதாக்க நாம் அர்ப்பணிப்புச் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.