கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை...!

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை...!

சீரமைப்பு பணிகள் காரணமாக இன்று கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்றிரவு 10 மணிமுதல் அடுத்த நாள் மாலை 4 மணி வரையில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.