வல்லரசின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு கோட்டாபயவின் செய்தி!

வல்லரசின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு கோட்டாபயவின் செய்தி!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல இழுபறிகள், வன்முறைகள், சர்ச்சைகளுக்கு பின்னர் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதி ஆகியோர்க்கு தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும், தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.