மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பமா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பமா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தை திறப்பது தொடர்பில் சில வேளை நாளைய தினம் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்மாகாணத்தில் தொடர்ந்தும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுக்கின்றமையினால் பாடாசாலைகள் திறப்பது தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.