நாடாளுமன்ற அமர்வுகளை இரு தினங்கள் மாத்திரம் நடத்த தீர்மானம்..!
எதிர்வரும் இரண்டு தினங்களில் மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் எட்டப்பட்டது.
இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் மாத்திரம் அமர்வுகள் இடம்பெறும் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் நாளை முதல் வழமைப்போல நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டுவதா? இல்லையா? என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற அமர்வை நடத்திச் செல்லல் மற்றும் சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் அதிக அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற பணிக்குழு மற்றும் ஏனைய பணியகங்களுக்கு உட்பட்ட 5 பேர் அடங்களாக 9 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் மூன்று பேர் பாதுகாப்பு பிரிவு மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றுபவர்கள் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.