அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்ததுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் அடங்கலாக 763 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 53062 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45000 கடந்துள்ளது.
தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்றில் இருந்து நேற்றைய தினம் 425 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45171 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் 420 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வடமாகாணத்தில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.