மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தப்பிச் சென்ற கைதி...!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தப்பிச் சென்ற கைதி...!

கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காலி பூஸ்ஸ சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார்.

குறித்த கைதி வெலிகம பொல்வத்த பிரதேசத்தில் வசிப்பதுடன்இ திருடிய குற்றசாட்டிற்காக 5 ஆண்டுகள் 3 மாதங்களுக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டவர்.

தப்பிச் சென்ற கைதியைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.