சுகாதார விதிமுறைகளை மீறிய 28 பேர் கைது!

சுகாதார விதிமுறைகளை மீறிய 28 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு வெளியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2 ஆயிரத்து 490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த மாதம் 5 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 137 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.