
இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில் தனியான அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க
4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு – பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில் தனியான அறை ஒன்றில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்த நிலையில், சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், முழுமைப்படுத்தப்படவேண்டிய கட்டாய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையடுத்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.