
வேலைக்கு சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவிசாவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை அவிசாவளை, தல்துவ கனுகொல்ல தோட்டப் பகுதியின் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த ஆர்.வசந்த (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் இன்று காலை சீதாவக்கை கைத்தொழில் பேட்டைக்கு வேலைக்கு செல்வதற்காக காலை 6.30 மணியளவில் கனுகொல்ல வீதியில் இருந்து தல்துவ பிரதான வீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பிரதான வீதியில் வேகமாக வந்த வான், மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வான் சாரதியை அவிசாவளை பொலிஸார் கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.