
நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ள தொடருந்துகளின் விபரங்கள்...!
கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகளை வழமைப்போல இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 36 தொடருந்து சேவைகள் நாளை முதல் இயங்கவுள்ளன.
இதன்படி பிரதான தொடருந்து மார்க்கத்தின் 20 தொடருந்து சேவைகளும், கரையோர தொடருந்து மார்க்கத்தின் 12 தொடருந்து சேவைகளும், வடக்கு மற்றும் களனிவெளி தொடருந்து மார்க்கத்தின் ஊடான 4 தொடருந்து சேவைகளும் நாளை முதல் இயக்கப்படவுள்ளன.
கல்கிசை - காங்கேசன்துறை யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை காலை 5.55 மணிக்கு கல்கிசை தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
காங்கேசன்துறை - கல்கிசை (யாழ்தேவி) கடுகதி தொடருந்து சேவை காலை 9.00 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை (உத்தரதேவி) நகரங்களுக்கிடையிலான கடுகதி தொடருந்து சேவை மு.ப. 11.50 கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை (உத்தரதேவி) நகரங்களுக்கிடையிலான கடுகதி தொடருந்து சேவை காலை 5.30 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும்.
கொழும்பு கோட்டை - பதுளை (பொடி மெனிக்கே) கடுகதி தொடருந்து சேவை காலை 5.55 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
பதுளை - கொழும்பு கோட்டை (பொடி மெனிக்கே) கடுகதி தொடருந்து சேவை காலை 8.30 மணிக்கு பதுளை தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
கொழும்பு கோட்டை - கண்டி நகரங்களுக்கிடையிலான கடுகதி தொடருந்து சேவை மாலை 3.35 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
கண்டி - கொழும்பு கோட்டை நகரங்களுக்கிடையிலான கடுகதி தொடருந்து சேவை காலை 6.15 மணிக்கு கண்டி தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு கடுகதி தொடருந்து சேவை காலை 06.05 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.
மட்டக்களப்பு - கொழும்பு கோட்டை கடுகதி தொடருந்து சேவை காலை 06.10 மணிக்கு மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திலிந்து ஆரம்பமாகும்.