கால்நடைகளுக்கு பரவி வரும் வைரஸ் தொடர்பில் ஆராய விசேட கூட்டம்!

கால்நடைகளுக்கு பரவி வரும் வைரஸ் தொடர்பில் ஆராய விசேட கூட்டம்!

தற்போது நாடாளாவிய ரீதியில் கால்நடைகளுக்கு பரவி வரும் வைரஸ் நோய் தொடர்பில் இன்றைய தினம் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கெஃப்ரி ஃபொக்ஸ் என அழைக்கப்படும் ஈக்கள் மூலம் பரவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தோல்வெடிப்பு, உணர்வின்மை, காய்ச்சல், பசியின்மை, கண்கள் மற்றும் மூக்கிலிருந்து திரவம் வெளியேறுதல் ஆகிய நோய் அறிகுறிகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் ஆராய்வதற்காக கால்நடைவள, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழிற்துறை இராஜாங்க அமைச்சரின் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவொன்றும் முன்னதாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.