முகக்கவசம் அணியாமல் இருந்த 252 பேரிடம் கொரோனா பரிசோதனை..! 02 பேருக்கு தொற்றுறுதி

முகக்கவசம் அணியாமல் இருந்த 252 பேரிடம் கொரோனா பரிசோதனை..! 02 பேருக்கு தொற்றுறுதி

திவுலுபிட்டி, பேலியகொடை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய 3 கொவிட் கொத்தணிகளை மையப்படுத்தி அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த கொத்தணிகளில் இருந்து இதுவரையில் 42 ஆயிரத்து 498 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் 522 பேர் மொத்தமாக கொவிட் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கட்டாரில் இருந்து இலங்கை வந்தவராவார்.

ஏனையவர்கள் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் இதுவரையில் ஆயிரத்து 701 பேர் கொவிட் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

134 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.

மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள 46 ஆயிரத்து 248 கொவிட் நோயாளர்களில், 7 ஆயிரத்து 6 பேர் தொடர்ந்தும் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

ஏனைய 39 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 523 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில் 252 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் 271 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 252 பேரில் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அதேபோல், 271பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வரவுள்ளதாகவும் குறிப்படப்படுகின்றது.