PHI என தெரிவித்து நிதி மோசடி - பதுளையில் சம்பவம்...!

PHI என தெரிவித்து நிதி மோசடி - பதுளையில் சம்பவம்...!

பொது சுகாதார பரிசோதகர்கள் என அடையாளப்படுத்தி பதுளை நகரில் உள்ள உணவங்களின் உரிமையாளர்களிடம் ஈசி கேஸ் ஊடாக பணம் பெறும் மோசடி ஒன்று காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் இருந்து பிரவேசிப்பதாக கூறியுள்ள சந்தேகநபர்கள், குறித்த உணவகங்களின் சேவையாளர்கள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படவில்லை என தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எனவே குறித்த சேவையாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் பெறப்பட வேண்டும் எனவும், அதனை சுகாதார அமைச்சிடம் இருந்து பெறுவதற்கு 45 ஆயிரம் ரூபாய் பணம் தேவை எனவும் சந்தேகநபர்கள், உணவக உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஈசி கேஸ் முறை ஊடாக ஐந்து கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு பணம் அனுப்பியுள்ளதாக உணவகம் ஒன்றின் உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு அந்த பகுதியின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரும் தொடர்புப்பட்டுள்ளதாக நிலவும் சந்தேகத்திற்கு அமைய அது தொடர்பிலும் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.