யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார்.
மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 14 நாள் தனிமைக்காலம் முடியும் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையிலேயே இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று தொற்றிற்குள்ளான மற்றையவர் 27 வயதான இளைஞனாவார்.
மருதனார்மட கொத்தணி 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026