நாட்டின் அநேக பிரதேசங்களில் இன்றும் மழையுடனான காலநிலை...!

நாட்டின் அநேக பிரதேசங்களில் இன்றும் மழையுடனான காலநிலை...!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

பிற்பகல் 1 மணிக்கு பின்னர் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைஇடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.