பாகிஸ்தான் அணியின் புதிய சர்வதேச கிாிக்கட் தொடர்!
இந்த வருடத்தில் 10 சர்வதேச கிரிக்கட் தொடர்களில் பாகிஸ்தான் அணி விளையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, 9 டெஸ்ட் போட்டிகள், 20 ஒருநாள் மற்றும் 39 இருபதுக்கு 20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அதில் உள்ளடக்கப்படவில்லை.
நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்கள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.